ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸரஸ்வதி மந்திர், ஜம்மு & கேஷ்மீர்
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஸரஸ்வதி மந்திர் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் நெடுஞ்சாலையில் டோடா மாவட்டம் பாரமுல்லா, ஜம்மு & கேஷ்மீர் மாநிலத்தில் அமைந்திருக்கிறது (Pin: 192114). சகல கலைகளுக்கும் தேவியான கலைவாணிக்கு சமர்பிக்கப்ப்ட்ட இந்த திருகோயில் தென் இந்திய கட்டடக்கலை சார்ந்தே உருவாக்கப்பட்டது. ஸ்ரீ சரஸ்வதி மந்திர்க்கு அடுத்து சிவ பெருமானுக்கும் மந்திர் அமைந்துள்ளது.
கலாச்சார ஒருங்கிணப்பின் மூலம் தேசிய ஒருமைபாட்டை வலுப்படுத்தும் வகையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் பல மாநிலங்களில், குறிப்பாக நம் நாட்டின் ஒவ்வொரு மூலைகளில் அமைந்திருக்கும் மாநிலங்களான அஸ்ஸாம், குஜராத் மற்றும் ஜம்மு & கேஷ்மீரில் கோயில்கள் நிர்மானித்துள்ளார்கள்.